முகப்பு
உலகம்

ஆப்கனில் வான்வழித் தாக்குதல்: 33 தலிபான்கள் பலி

ஆப்கனில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 33 தலிபான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். 

Updated On : 1 ஜூலை, 2021 at 4:45 PM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:02 AM

ஆப்கனில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 33 தலிபான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். 
ஆப்கனின் வடக்கு மாகாணமான பால்கில் உள்ள கல்தர், சோர்தெபா ஆகிய மாவட்டங்களில் தலிபான்கள் ஒன்றுகூடியிருப்பதாக வந்த தகவலையடுத்து அரசு சார்பில் அப்பகுதிகளில் வான்வழித் தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. 
இந்த சம்பவத்தில் 33 தலிபான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர், 19 பேர் கயாமடைந்தனர் என்று அந்நாட்டின் ராணுவ செய்தி தொடர்பாளர் முகமது ஹனிப் தெரிவித்துள்ளார். மேலும் இந்த தாக்குதலில் ஏராளமான ஆயுதங்கள் அழிக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். 
ஆப்கனில் 19 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டுப் போர் நீடித்து வருகிறது. தலிபான் அமைப்பினருக்கும், ஆப்கன் பாதுகாப்புப்படையினருக்கும் இடையிலான மோதலில் இதுவரை பல ஆயிரம் அப்பாவி பொதுமக்கள் பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.