முகப்பு
உலகம்

மாடர்னா தடுப்பூசிக்கு அவசரகால அனுமதியளித்த இந்தோனேசியா

கரோனா பாதிப்பிற்கு எதிராகப் பயன்படுத்தப்படும் மாடர்னா தடுப்பூசிக்கு இந்தோனேசிய அரசு அவசரகால ஒப்புதல் வழங்கியுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:32 AM
மாடர்னா தடுப்பூசிக்கு அவசரகால அனுமதியளித்த இந்தோனேசியா
பகிர்:

கரோனா பாதிப்பிற்கு எதிராகப் பயன்படுத்தப்படும் மாடர்னா தடுப்பூசிக்கு இந்தோனேசிய அரசு அவசரகால ஒப்புதல் வழங்கியுள்ளது.

உலகம் முழுவதும் கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. பல்வேறு நாடுகளும் தடுப்பூசி செலுத்துவதில் முனைப்பு காட்டி வருகின்றன. 

இந்த வரிசையில் இந்தோனேசியாவில் கரோனா தொற்றுக்கு எதிராக தடுப்பூசி செலுத்தும்பணி கடந்த மார்ச் மாதம் முதல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மாடர்னா தடுப்பூசிக்கு இந்தோனேசிய அரசு அவசரகால பயன்பாட்டுக்கான ஒப்புதலை வழங்கியுள்ளது. 

இதன்மூலம் மாடர்னா தடுப்பூசி பிலிப்பின்ஸ் நாட்டு மக்களுக்கு செலுத்துவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படவிருக்கின்றன. கோவாக்ஸ் திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 40 லட்சம் கரோனா தடுப்பூசிகளை இந்தோனேசிய அரசு பெற உள்ளது. இந்தத் தடுப்பூசிகள் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு செலுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.