முகப்பு
உலகம்

பிரேசிலில் ஒரேநாளில் கரோனாவுக்கு 830 பேர் உயிரிழப்பு

பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 830 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:34 AM
பகிர்:

பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 830 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பிரேசில் சுகாதாரத்துறை அமைச்சகம் மேலும் கூறியிருப்பதாவது: 

கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த 830 போ் பலியாகினா். இதையடுத்து, நாட்டின் ஒட்டுமொத்த கரோனா பலி எண்ணிக்கை 524,417-ஆக அதிகரித்துள்ளது.

இதுதவிர, புதிதாக 27,783 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்துடன், நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 18,769,808-ஆக அதிகரித்துள்ளது.

நாடு முழுவதும் 10 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இதில் 2.7 கோடி பேருக்கு இரண்டு தவணை தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுள்ளன. 

நாட்டில் கரோனா பாதிப்பில் அமெரிக்கா, இந்தியாவுக்கு அடுத்தபடியாக பிரேசில் மூன்றாம் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.