28 பேருடன் காணாமல் போன ரஷிய விமானம்: தேடுதல் பணிகள் தீவிரம்
ரஷியாவில் 28 பயணிகளுடன் சென்ற பயணிகள் விமானம் மாயமானதைத் தொடர்ந்து அதனைத் தேடும் பணிகள் தீவிரமடைந்துள்ளன.
ரஷியாவில் 28 பயணிகளுடன் சென்ற பயணிகள் விமானம் மாயமானதைத் தொடர்ந்து அதனைத் தேடும் பணிகள் தீவிரமடைந்துள்ளன.
ரஷியாவின் அன்டோனோவ் ஆன்-26 பயணிகள் விமானம் பெட்ரோபாவ்லோவ்ஸ்க்-கம்சாட்ஸ்கி நகரிலிருந்து பழனா நகரை நோக்கி செவ்வாய்க்கிழமை புறப்பட்டது. ஒரு குழந்தை, 6 பணியாளர்கள் உள்பட 28 பேருடன் பயணித்து வந்த விமானம் கம்சட்கா தீபகற்பத்திற்கு மேல் செல்லும் போது விமானக் கட்டுப்பாட்டு மையத்துடனான தனது தொடர்பை இழந்தது.
இதனைத் தொடர்ந்து விமானம் மாயமானதை உறுதி செய்த அதிகார்கள் விமானத்தைத் தேடும் பணியைத் தொடங்கியுள்ளனர். மாயமான விமானத்திஒல் பலானாவின் மேயரான ஓல்கா மொகிரேவாவும் பயணம் செய்ததாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
மாயமான விமானம் 1982 முதல் பயணிகள் விமான சேவையில் ஈடுபடுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாயமான விமானம் மலை மீது மோதி விபத்துக்குள்ளாகி இருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.