உலகம்

தடுப்பூசி செலுத்தவில்லையா? அரசு அலுவலகங்களுக்குள் அனுமதி இல்லை: ஐக்கிய அரபு நாடுகள்

DIN

கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு அரசு அலுவலகங்களில் நுழைய ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் அனுமதி இல்லை என ஐக்கிய அரபு நாடுகள் வியாழக்கிழமை அறிவித்துள்ளது.

உலகம் முழுவதும் கரோனா பரவலால் பாதிக்கப்பட்ட நாடுகள் அடுத்த அலை வராமல் தடுக்க தடுப்பூசிகள் போடும் பணியை விரைவு படுத்தியுள்ளார்கள்.

இந்நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் நுழைய இரண்டு தவணை தடுப்பூசிகள் செலுத்திக் கொண்டவர்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து அரபு அமீரத்தின் அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

அரசு அலுவலகங்களில் பணிபுரியும் அமைச்சர் உள்பட அனைத்து ஊழியர்கள், அலுவலகத்திற்கு வருகை தரும் வாடிக்கையாளர்கள் என அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொண்டால் மட்டுமே ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் அலுவலகத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள்.

தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமல் அலுவலகத்திற்கு வருகை தருபவர்கள் 48 மணிநேரத்திற்குள் எடுக்கப்பட்ட கரோனா பரிசோதனை சான்றிதழை கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.

மேலும், 16 வயதுக்கு உள்பட்டவர்களுக்கு இந்த விதிமுறைகளிலிருந்து விலக்கு அளிக்கப்படுவதாக அறிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணிக்கை மைய வளாகத்துக்குள் அத்துமீறி நுழைய முயன்ற இளைஞரால் பரபரப்பு!

‘எங்கேயும் எப்போதும்..’

பாலியல் விடியோக்களை வெளியிட்டது நான்தான்.. பிரஜ்வல் ஓட்டுநர் பரபரப்பு வாக்குமூலம்!

மழை வேண்டி நூதன வழிபாடு: பன்றி பலியிட்டு விருந்து!

பதஞ்சலியின் 14 மருந்துகளுக்கு தடை!

SCROLL FOR NEXT