வங்கதேச தொழிற்சாலையில் தீ விபத்து 
உலகம்

வங்கதேச தொழிற்சாலையில் தீ விபத்து: 52 பேர் பலி, பலர் படுகாயம்

வங்கதேசத்தில் உள்ள தொழிற்சாலையில் வியாழக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் 52 பேர் பலி, மேலும் பலர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

DIN

வங்கதேசத்தில் உள்ள தொழிற்சாலையில் வியாழக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் 52 பேர் பலி, மேலும் பலர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தலைநகர் தக்காவிற்கு அருகிலுள்ள ரூப்கஞ்சில் உள்ள உணவு தயாரிக்கும் தொழிற்சாலையில் நேற்று பிற்பகலில் தீ விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில், 52 பேர் உயிரிழந்துள்ளதாகவும், தீ விபத்திலிருந்து தப்பிக்க மேல் தளங்கள் இருந்து கீழே குதித்த பலர் படுகாயமடைந்துள்ளனர்.

சுமார் 24 மணிநேரமாக தீயை அணைக்கும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டு வருகிறார்கள்.

மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், பலியானோர் எண்ணிக்கை அதிகரிக்கும் அச்சம் எழுந்துள்ளது. 

மேலும், விபத்து நடந்தது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரயில் கட்டணம் உயர்வு! டிச. 26 முதல் அமல்!

கோவையில் லாரி ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! 4 கார்கள் மீது மோதி விபத்து

“யாரும் யாருக்கும் பணம் கொடுக்கவில்லை!” நேஷனல் ஹெரால்டு வழக்கு குறித்து ப. சிதம்பரம்

இந்திய சினிமாவிலேயே பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா!

டெஸ்ட்டில் வரலாற்றுச் சாதனை நிகழ்த்திய நியூசி. வீரர் டெவான் கான்வே!

SCROLL FOR NEXT