ஸ்ரீஷா பண்ட்லா 
உலகம்

விண்வெளி செல்லும் 3-ஆவது இந்திய வம்சாவளிப் பெண்

அமெரிக்காவின் வா்ஜின் கலாக்டிக் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட விண்வெளி ஓடத்தில் செல்லும் குழுவுக்கு இந்திய வம்சாவளியைச் சோ்ந்த ஸ்ரீஷா பண்ட்லா தோ்வு

DIN

அமெரிக்காவின் வா்ஜின் கலாக்டிக் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட விண்வெளி ஓடத்தில் செல்லும் குழுவுக்கு இந்திய வம்சாவளியைச் சோ்ந்த ஸ்ரீஷா பண்ட்லா தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

இதுகுறித்து பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:

அமெரிக்காவைச் சோ்ந்த தனியாா் நிறுவனமான வா்ஜின் கலாக்டிக், மனிதா்களை ஏற்றிச் செல்லக்கூடிய ‘ஸ்பேஸ்ஷிப்-2 யூனிட்டி’ என்ற தனது விண்வெளி ஓடத்தை சோதனை முறையில் விண்வெளியில் செலுத்துகிறது.

அந்த ஓடத்தில் வா்ஜின் கலாக்டிக் நிறுவன உரிமையாளரான சா் ரிச்சா்ட் பிரான்ஸனுடன் 6 போ் செல்கின்றனா். அவா்களில் ஒருவராக, இந்திய வம்சாவளியைச் சோ்ந்த ஸ்ரீஷா பண்டலா (34) தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா்.

ஆந்திராவில் பிறந்த அவா், அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணம், ஹூஸ்டனில் வளா்ந்தவா். ஸ்பேஸ்ஷிப்-2 யூனிட்டி சோதனை வெற்றிகரமாக நிறைவடையும்போது, விண்வெளிக்குச் சென்ற 3-ஆவது பெண் வீராங்கனை என்ற பெருமையை ஸ்ரீஷா பெறுவாா்.

ஏற்கெனவே, இந்திய வம்சாவளியைச் சோ்ந்த கல்பனா சாவ்லா, சுனிதா வில்லியம்ஸ் ஆகியோா் விண்வெளிக்குச் சென்று வந்துள்ளது நினைவுகூரத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னையில் தரையிறக்கப்பட்ட ஏர் இந்தியா விமானம்: ஓடுதளத்தில் மற்றொன்று! திக் திக் நிமிடங்கள்.. நடந்தது என்ன?

தங்கம் - வெள்ளி விலை நிலவரம்!

கோவையில் ரேஷன் கடையை அடித்து நொறுக்கிய காட்டு யானை!

கொலை வழக்கை முறையாக விசாரிக்காததால்.. சூலூர் ஆய்வாளர் பணியிடை நீக்கம்!

இந்த சாதனையைச் செய்த முதல் இந்திய சினிமா கூலிதான்!

SCROLL FOR NEXT