உலகம்

தைவானில் அடுத்தடுத்து ஏற்பட்ட 22 நிலநடுக்கங்களால் மக்கள் அச்சம்

DIN

கிழக்கு தைவானில் புதன்கிழமை ஏற்பட்ட அடுத்தடுத்த 22 நிலநடுக்கங்களால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். 

தைவான் நாட்டின் கிழக்கு கடற்கரை பகுதியில் உள்ள ஹூலியன் கவுண்டி நகரத்தில் புதன்கிழமை தொடர்ச்சியாக 2 மணி நேரங்களுக்கு நிலநடுக்கங்கள் பதிவாகின. காலை 6.52 மணிக்கு தொடங்கிய நிலநடுக்கம் நகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்ததடுத்து ஏற்பட்டதால் மக்கள் பீதியடைந்தனர்.

ரிக்டர் அளவில் 5.2ஆக பதிவான முதல் நிலநடுக்கம் இதர பகுதிகளில் 3 முதல் 5 ரிக்டர் அளவுகளில் பதிவானது. தொடர்ச்சியான 22 நிலநடுக்ககங்களால் அச்சமடைந்த மக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேறினர். 

எனினும் இந்த நிலநடுக்கங்களால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த முழுமையான விவரங்கள் வெளியாகவில்லை. முன்னதாக கடந்த ஜூன் மாதத்தில் இதே பகுதியில் 4.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகனைக் கொல்ல ரூ.75 ஆயிரம் கூலி: கைதான தேடப்பட்ட குற்றவாளி!

தீபக் சஹாருக்கு காயமா? சிஎஸ்கே பயிற்சியாளர் பதில்!

கத்தரிப்பூ சேலைக்காரி! மிருணாளினி ரவி...

ஆவேஷம் திரைப்படம் பார்த்து அழுதேன்: இயக்குநர் ஜியோ பேபி

ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு!

SCROLL FOR NEXT