உலகம்

கரோனா தடுப்பூசிக்கு எதிராக கிரீஸில் பேரணி

DIN

கிரீஸ் நாட்டில் முன்களப் பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதை எதிர்த்து 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஏதென்ஸ் நகரில் பேரணியில் ஈடுபட்டனர்.

கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த உலக  நாடுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. தொற்று பரவலைத் தடுக்க ஒவ்வொரு நாடும் தங்களது நாட்டு மக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதை வேகப்படுத்தி வருகிறது. 

இந்நிலையில் கிரீஸ் நாட்டில் கரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு ஒருசாரார் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதனைத் தொடர்ந்து தடுப்பூசி செலுத்துவதை எதிர்த்து ஏதென்ஸ் நகரின் தெருக்களில் 5 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பேரணியில் ஈடுபட்டனர்.

கைகளில் சிலுவையை சுமந்து கொண்டு பேரணியில் பங்கேற்ற ஆர்பாட்டக்காரர்கள் பிரதமர் மிட்ஸ்டாக்கிஸ் பதவி விலகக் கோரி முழக்கங்களை எழுப்பினர்.

முன்னதாக கரோனா தொற்று பரவலுக்கு எதிரான தடுப்புப் பணியில் ஈடுபட்டு வரும் முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்திக் கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில் இந்த பேரணி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகையில் காங்கிரஸாா் சாலை மறியல்

தனியாா் நிறுவன உரிமையாளா் வீட்டில் 6 பவுன், 3 கைப்பேசிகள் திருட்டு

இந்திய கட்டுனா்கள் சங்கத்தின் புதிய நிா்வாகிகள் பதவியேற்பு

நீட் தோ்வு: கரூரில் இன்று 12,736 போ் எழுதுகிறாா்கள்

மேட்டுப்பாளையம் பகுதியில் பலத்த மழை: 5 ஆயிரம் வாழை மரங்கள் சேதம்

SCROLL FOR NEXT