முகப்பு
உலகம்

ஜெர்மனி வெள்ளம்: 60 பேர் பலி, 1,300 பேரை காணவில்லை

மேற்கு ஜெர்மனியில் புதன்கிழமை முதல் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 50க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். மேலும், 1,300 பேரை காணவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

Updated On : 16 ஜூலை, 2021 at 11:45 AM
வெள்ளத்தில் மூழ்கிய ஜெர்மனி
பகிர்:

மேற்கு ஜெர்மனியில் புதன்கிழமை முதல் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 50க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். மேலும், 1,300 பேரை காணவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த புதன்கிழமை இரவு முதல் மேற்கு ஜெர்மனியில் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஜெர்மனி மட்டுமல்லாமல் அண்டை நாடுகளான பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்திலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இடிபாடுகளில் சிக்கிய கார்கள்

இந்த வெள்ளத்தால் வீடுகள், அடுக்குமாடி கட்டடங்கள், பாலங்கள் என அனைத்தும் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. பல கட்டடங்கள் இடிந்து விழும் சூழலில் உள்ளது.

Advertisement

இதுவரை ஜெர்மனியில் 59 பேரும், பெல்ஜியத்தில் 6 பேரும் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதிக பாதிப்புக்குள்ளான ஜெர்மனியின் ரைன்லேண்ட்-பலட்டினேட் மாகாணத்தில் 1.300க்கும் மேற்பட்ட மக்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகியுள்ளது.

வெள்ளத்தில் சிக்கிய பயணிகள் ரயில்

மேலும், வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணியில் ராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.