முகப்பு
உலகம்

இரண்டு தவணை தடுப்பூசி போட்டுக்கொண்ட பிரிட்டன் அமைச்சருக்கு கரோனா

இரண்டு தவணை தடுப்பூசி போட்டுக்கொண்ட பிரிட்டன் சுகாதாரத் துறை அமைச்சர் சஜித் ஜாவித்துக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:41 AM
கோப்புப்படம்
பகிர்:


இரண்டு தவணை தடுப்பூசி போட்டுக்கொண்ட பிரிட்டன் சுகாதாரத் துறை அமைச்சர் சஜித் ஜாவித்துக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர் லேசான அறிகுறிகளுடன் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டார்.

இதுபற்றி ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளது:

"இன்று காலை நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. எனது பிசிஆர் முடிவுக்காகக் காத்திருக்கிறேன். ஆனால், இரண்டு தவணை தடுப்பூசியும் போட்டுவிட்டேன். லேசான அறிகுறிகளே உள்ளன. தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லையெனில் நீங்களும் முன்வந்து தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள்."

ஜாவித் கடந்த செவ்வாய்க்கிழமை தெற்கு லண்டனிலுள்ள காப்பகத்துக்குச் சென்றார். அதே தினம் நாடாளுமன்றத்திலும் அவர் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.