முகப்பு
உலகம்

பிரேசிலில் ஒரேநாளில் 54,517 பேருக்கு கரோனா

பிரேசிலில் ஒரேநாளில் 54,517 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:44 AM
பகிர்:

பிரேசிலில் ஒரேநாளில் 54,517 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து அந்நாட்டின் சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 54,517 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 19,473,954ஆக உயர்ந்துள்ளது. 
அதேசமயம் கரோனாவுக்கு நேற்று ஒரேநாளில் 1,424 பேர் பலியாகியுள்ளனர். இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 545,604ஆக உயர்ந்துள்ளது. கரோனாவிலிருந்து இதுவரை 18.2 மில்லியன் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. பிரேசிலை பொறுத்தவரை கரோனா பாதிப்பில் உலகளவில் 3ஆம் இடத்திலும் பலி எண்ணிக்கையில் 2ஆம் இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.