முகப்பு
உலகம்

பாகிஸ்தான் : கரோனா தொற்றால் 10 லட்சம் பேர் பாதிப்பு

பாகிஸ்தானில் கரோனா நோய்த் தொற்றால் இதுவரை 10 லட்சம் பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்திருக்கிறது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:44 AM
பாகிஸ்தான் : கரோனா தொற்றால் 10 லட்சம் பேர் பாதிப்பு
பகிர்:

பாகிஸ்தானில் கரோனா நோய்த் தொற்றால் இதுவரை 10 லட்சம் பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்திருக்கிறது . இதன் மூலம் உலகளவில் 10 லட்சத்தை தாண்டிய கரோனா பாதிப்பாளர்களைக்  கொண்ட 30 வது நாடாக பாகிஸ்தான் மாறியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,425 பேர் கரோனா தொற்றுக்கு ஆளானதால் ஒட்டுமொத்தமாக பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 1,000,034 என்றும் 11 பேர் இறந்திருப்பதாகவும் தெரிவித்தனர். 

அந்நாட்டின் தேசிய மருத்துவ  மையம்  அளித்த தகவலில்  இதுவரை கரோனாவிற்கு பலியானர்வகளின் எண்ணிக்கை 22,939 பேர்  என அறிவித்திருக்கிறார்கள் .

கரோனாவால் பாதிக்கப்பட்ட 10 லட்சம் பேரில் 53,623 சிகிச்சையில் இருப்பதாகவும், 923,472 பேர் குணமடைந்திருப்பதாகவும் கடந்த 24 மணி நேரத்தில் 25,215 பேருக்கு மாதிரி பரிசோதனைகள் செய்யப்பட்டிருப்பதாகவும்  தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

முழு கட்டுரையைப் படிக்க →