உலகம்

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் 

DIN

நேற்று ( திங்கள்கிழமை ) இரவு 7 மணி அளவில் இந்தோனேசியாவின் சுலாவெசி என்கிற பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்நாட்டு புவியியல் ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறார்கள்.

ரிக்டர் அளவுகோலில் 6.5 ஆக பதிவாகியிருந்த நிலநடுக்கத்தை கடலோர மக்கள் உணர்ந்து வீட்டை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு சென்றனர். கட்டடங்கள் அதிர்ந்தாலும் எதுவும் இடிந்து விழுகவில்லை எனவும் எந்த உயிர்ச் சேதங்களும் நிகழவில்லை  என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது .

நிலநடுக்கத்தின் மையப்பகுதி 59 கி.மீ தொலைவில் 10 கி.மீ ஆழத்தில் உணரப்பட்டதாக தெரிவித்தனர்.

அதற்கு முன்னதாக மத்திய சுலாவெசி பகுதியில்  காலை 10 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆக பதிவாகியிருந்தது குறிபிடத்தக்கது .
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளைப் பறிகொடுத்தேன்” -உச்சநீதிமன்றத்தில் தந்தை முறையீடு

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் மயங்க் யாதவ்!

SCROLL FOR NEXT