உலகம்

இலங்கை : கரோனா சட்டங்களை மீறிய 52,000 பேர் கைது  

DIN


கரோனா நோயின் தாக்குதல்களால் உலகின் அனைத்து நாடுகளும் தொற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக சில சட்டங்களைக் கொண்டு வந்தனர். தனிமைப்படுத்தப்பட்ட நோயாளிகள் பொது இடங்களுக்கு செல்வது , பொதுமக்கள் கூடும் இடங்களில் முகக்கவசம் அணியாமல் செல்பவர்களின் மீது வன்முறைச் சட்டங்கள் போடப்படுகிறது . 

இந்நிலையில் இலங்கையில் கடந்த வருடம் அக்டோபர் மாதத்திலிருந்து இதுவரை கட்டுப்பாடுகளை மீறி வன்முறையில் ஈடுபட்டதாக  52,124  பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக அந்நாட்டு காவல்துறை தெரிவித்திருக்கிறார்கள் . 

தற்போது அங்கு பரவி வரும் கரோனாத் தொற்றின் காரணமாக மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லவே தடை விதிக்கப்பட்டிருக்கிறது. தடையை மீறி செல்பவர்கள், முகக்கவசம் அணியாமல் சுற்றித் திரிபவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள் என சுகாதாரத்துறை அமைச்சர் கூறியிருக்கிறார்.

இதுவரை இலங்கையில் கரோனா தொற்றுக்கு பாதிப்படைந்தவர்கள் 2,98,181 பேர்  என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வில்லியனூரில் அந்திம புஷ்கரணி ஆரத்தி

கால்வாய் பணி: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்

புதுச்சேரி சிறுமி கொலை வழக்கில் குற்றப் பத்திரிகை தாக்கல்

சிறப்பு அலங்காரத்தில் குரு பகவான்

தென்காசியில் சமூக நல்லிணக்கக் கூட்டமைப்பு சாா்பில் முப்பெரும் விழா

SCROLL FOR NEXT