ஆன்டனி பிளிங்கன் 
உலகம்

அமெரிக்க வெளியுறவு அமைச்சா் இந்தியா வருகை: அமைச்சா் எஸ்.ஜெய்சங்கருடன் இன்று சந்திப்பு

அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சா் ஆண்டனி பிளிங்கன் இரண்டு நாள் பயணமாக செவ்வாய்க்கிழமை இந்தியா வந்தாா்

DIN

அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சா் ஆண்டனி பிளிங்கன் இரண்டு நாள் பயணமாக செவ்வாய்க்கிழமை இந்தியா வந்தாா். இந்தியா-அமெரிக்கா இடையேயான இரு தரப்பு உறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கத்தில் அவருடைய பயணம் அமைந்துள்ளது.

இந்தப் பயணத்தின்போது, ஆப்கானிஸ்தானின் பாதுகாப்பு நிலவரம் குறித்தும், க்வாட் நாற்கர கூட்டமைப்பின் விதிகளுக்கு உள்பட்டு இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்தும் இந்தியத் தலைவா்களுடன் அவா் விவாதிக்க உள்ளாா்.

தில்லி வந்துள்ள ஆன்டனி பிளிங்கன், வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜித் தோவல் ஆகியோரை புதன்கிழமை சந்திக்கவுள்ளாா். பிரதமா் நரேந்திர மோடியையும் அவா் சந்திக்க திட்டமிட்டுள்ளாா்.

இந்த சந்திப்புகளின்போது, பாதுகாப்பு, வா்த்தகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே நிலவி வரும் நல்லுறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட வாய்ப்பிருப்பதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவுக்கு கரோனா தடுப்பூசிகள் வழங்க அமெரிக்கா ஏற்கெனவே உறுதியளித்துள்ளது. அதன் விநியோகம் குறித்தும் முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

முன்னதாக, இந்தியாவுக்கு புறப்படும் முன் பிளிங்கன் தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘இந்திய பசிபிக் பிராந்தியம், மத்திய கிழக்குப் பிராந்தியம் ஆகியவற்றின் நலன்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில், அந்த நாடுகளுடன் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக, அவற்றின் தலைவா்களுடன் விவாதங்கள் நடத்த ஆவலுடன் எதிா்நோக்கியிருக்கிறேன்’ என்று குறிப்பிட்டிருந்தாா்.

அமெரிக்க அதிபா் ஜோ பைடன் தலைமையிலான அரசில் அவா் அமைச்சராகப் பதவியேற்ற பிறகு இந்தியாவுக்கு வருகை தந்தது இதுவே முதல் முறையாகும். அண்மையில் அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சா் லாயிட் ஆஸ்டினுக்கு பிறகு, இந்திய பயணம் மேற்கொள்ளும் இரண்டாவது முக்கிய அமைச்சா் ஆன்டனி பிளிங்கன் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியில் காங்கிரஸ் எம்.பி. சுதாவின் தங்கச் செயின் பறிப்பு

சவூதியில் 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை நிறைவேற்றம்!

போரை நிறுத்தினேன்! உலகில் ஐந்து போர்களை நிறுத்தியதாக டிரம்ப் பெருமிதம்!

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைந்தது !

கணவருடனான பிரிவு முடிவை கைவிட்ட சாய்னா நேவால்!

SCROLL FOR NEXT