தடுப்பூசி செலுத்தவில்லையா? பணியாளர்களுக்கு அதிர்ச்சியளித்த பாகிஸ்தான் ரயில்வே 
உலகம்

தடுப்பூசி செலுத்தவில்லையா? பணியாளர்களுக்கு அதிர்ச்சியளித்த பாகிஸ்தான் ரயில்வே

பாகிஸ்தானில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமல் தவிர்த்துவரும் ரயில்வே பணியாளர்களுக்கு சம்பளம் நிறுத்திவைக்கப்படும் என அந்நாட்டு ரயில்வேதுறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

DIN

பாகிஸ்தானில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமல் தவிர்த்துவரும் ரயில்வே பணியாளர்களுக்கு சம்பளம் நிறுத்திவைக்கப்படும் என அந்நாட்டு ரயில்வேதுறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கரோனா தொற்று பரவலைத் தடுக்க பல்வேறு நாடுகளும் தடுப்பூசி செலுத்தும் பணியைத் தீவிரப்படுத்தி வருகின்றன. 

இந்நிலையில் பாகிஸ்தானில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களை விரைவில் தடுப்பூசி எடுத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அந்தவகையில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமல் தவிர்த்துவரும் ரயில்வே பணியாளர்களுக்கு சம்பளத்தை நிறுத்திவைப்பதற்கான உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத பணியாளர்களுக்கு சம்பளம் நிறுத்திவைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரயில்வே பணியாளர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்வதை உறுதிப்படுத்த மண்டல அலுவலகங்களுக்கு சுற்றறிக்கையை அந்நாட்டின் ரயில்வே துறை அனுப்பியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

நெல்லையில் பொருநை அருங்காட்சியகம் திறப்பு

SCROLL FOR NEXT