18 மாதங்களுக்குப் பிறகு செளதி அரேபியா அரசு ஆகஸ்ட் 1 முதல் மீண்டும் சுற்றுலாத் தலங்களைத் திறக்க உள்ளது.
கரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 18 மாதங்களாக செளதி அரேபியாவில் சுற்றுலாப் பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வந்தன.
இதையும் படிக்க | சர்வதேச விமானப் போக்குவரத்துக்கான தடை ஆகஸ்ட் 31 வரை நீட்டிப்பு
இந்நிலையில் தொற்று பரவல் கட்டுக்குள் வந்த நிலையில் மீண்டும் சுற்றுலாவை தீவிரப்படுத்த அந்நாட்டு அரசு முடிவெடுத்துள்ளது.
அதன்படி ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் மீண்டும் சுற்றுலாத் தலங்களை அந்நாட்டு அரசு திறக்க உள்ளது. 49 ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த தடுப்பூசி செலுத்திக் கொண்ட சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி வழங்கி செளதி அரசு உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிக்க | சீனத்தில் மீண்டும் பரவும் கரோனா
முன்னதாக சிவப்பு பட்டியலிடப்பட்ட நாடுகளுக்கு சென்ற குடிமக்களுக்கு 3 ஆண்டுகளுக்கு பயணத் தடை விதிப்பதற்கான அறிவிப்பை கடந்த வாரம் செளதி அரசு வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.