முகப்பு
உலகம்

பெரு நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 40 பேர் காயம் 

பெரு நாட்டின் பியூரா பகுதியில் நேற்று (வெள்ளிக்கிழமை)  ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 40 பேர் வரை காயமடைந்ததாக அந்நாட்டு மருத்துவத்துறை தெரிவித்திருக்கிறது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:48 AM
பெரு நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 40 பேர் காயம் 
பகிர்:

பெரு நாட்டின் பியூரா பகுதியில் நேற்று (வெள்ளிக்கிழமை)  ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 40 பேர் வரை காயமடைந்ததாக அந்நாட்டு மருத்துவத்துறை தெரிவித்திருக்கிறது.

ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவான நிலநடுக்கத்தின் மையப்பகுதி 36 கி.மீ ஆழத்தில் உணரப்பட்டிருக்கிறது .

சுல்லெனா பகுதியில் நிலநடுக்கத்தின் காரணமாக 38 பேர் வரை காயம் அடைந்ததாகவும் , இருவர் படுகாயம் அடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டதோடு சில கட்டடங்கள் மற்றும் வழிபாட்டுத்தளங்கள் இடிந்து விழுந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து அந்நாட்டின் அதிபர் பெட்ரோ காஸ்டிலோ பாதிக்கப்பட்ட  இடத்திற்கு விரைந்தார்.

முழு கட்டுரையைப் படிக்க →