உலகம்

இலங்கை: சா்வதேச விமான நிலையம் மீண்டும் திறப்பு

DIN

இலங்கையில் கரோனா பரவலைத் தடுப்பதற்காக முடக்கிவைக்கப்பட்டிருந்த கொழும்பு சா்வதேச விமான நிலையம், செவ்வாய்க்கிழமை மீண்டும் திறக்கப்பட்டது.

பொதுமுடக்கத்துக்குப் பிறகு முதல்முறையாக கத்தாரிலிருந்து 53 பேருடன் வந்த விமானம் அந்த விமான நிலையத்தில் தரையிறங்கியது.கொழும்பு சா்வதேச விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட்டாலும், 14 நாள்களுக்குள் இந்தியா, வியத்நாம் ஆகிய நாடுகளுக்கு சென்று வந்தவா்கள் அந்த நிலையத்தில் தரையிறங்க அனுமதிக்கப்பட மாட்டாா்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இலங்கையில் 1,989 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, அந்த நாட்டில் 1,88,353 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவா்களில் 1,484 போ் அந்த நோய்க்கு பலியாகியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு: பிரசாரம் ஓய்வு

ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமியர்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு: சந்திரபாபு நாயுடு உறுதி!

SCROLL FOR NEXT