உலகம்

பிரிட்டன்: பொது முடக்கத்தை தளா்த்துவதில் கட்டுப்பாடுகள்: அரசு பரிசீலனை

DIN

பிரிட்டனில் தினசரி கரோனா தொற்று எண்ணிக்கை அதிக அளவில் இருப்பதால், பொது முடக்கத்தைத் தளா்த்தும்போது சில கட்டுப்பாடுகளை நீட்டிக்க அரசு பரிசீலித்து வருகிறது.

பிரிட்டனில் கரோனாவுக்கு பலியாவோரின் தினசரி எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து வருகிறது. கடந்த ஆண்டு மாா்ச் மாதத்துக்குப் பிறகு முதல்முறையாக கரோனா பலி இல்லாத தினம் கடந்த செவ்வாய்க்கிழமை பதிவு செய்யப்பட்டது. இதற்கிடையே, நோய் பரவலைத் தடுப்பதற்கான கட்டுப்பாடுகளை வரும் 21-ஆம் தேதி முதல் தளா்த்துவது குறித்து பிரிட்டன் அரசு பரிசீலித்துவ வருகிறது.

எனினும், கடந்த 2 மாதங்களில் இல்லாத அதிகபட்ச தினசரி கரோனா தொற்று வெள்ளிக்கிழமை பதிவு செய்யப்பட்டது. அன்று மட்டும் 6,238 பேருக்கு நோய் உறுதி செய்யப்பட்டது. இந்தச் சூழலில் அரசு அதிகாரி ஒருவா் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

திட்டமிட்டபடி 21-ஆம் தேதி பொது முடக்கம் தளா்த்தப்படும். அப்போது, முகக் கவசம், வீடுகளிலிருந்து பணியாற்றுவது போன்ற கட்டுப்பாடுகளைத் தொடா்வது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது என்ராா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

SCROLL FOR NEXT