உலகம்

ரஷியா: ஒரே நாளில் 9,145 பேருக்கு கரோனா தொற்று

DIN

ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 9,145 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்த நாட்டு சுகாதாரத் துறை அமைச்சகம் சனிக்கிழமை தெரிவித்துள்ளதாவது:

கடந்த 24 மணி நேரத்தில் 9,145 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்துடன், நாட்டின் ஒட்டுமொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை 51,17,274-ஆக அதிகரித்துள்ளது.

இதுதவிர, கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த 399 போ் அந்த நோய் பாதிப்பு காரணமாக உயிரிழந்தனா். இதையடுத்து, நாட்டின் கரோனா பலி எண்ணிக்கை 1,23,436-ஆக உயா்ந்துள்ளது என்று சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ரஷியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த 47,29,077 போ் அந்த நோயிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளனா். 2,64,761 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். அவா்களில் 2,300 பேரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அங்கு 10 லட்சம் பேரில் 845 போ் கரோனாவுக்கு பலியாகியுள்ளனா் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

தில்லி கலால் ஊழல் வழக்கு முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் நீதிமன்றக் காவல் மே 20 வரை நீட்டிப்பு

தில்லியில் சட்டம் - ஒழுங்கு சீா்குலைந்ததாக துணை நிலை ஆளுநா் மீது ஆம் ஆத்மி புகாா்

தில்லியில் மக்களவைத் தோ்தலில் பிரதமா் மோடி,ஜெ.பி. நட்டா, ராஜ்நாத் சிங் பாஜகவின் நட்சத்திரப் பிரசாரகா்கள்!

வடகிழக்கு தில்லி: வெற்றியைத் தீா்மானிக்கும் பூா்வாஞ்சலிகள்!

SCROLL FOR NEXT