முகப்பு
உலகம்

பிரேசிலில் ஒரேநாளில் 85,149 பேருக்கு கரோனா; 2,216 பேர் பலி

பிரேசிலில் ஒரேநாளில் 85,149 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:23 AM
பகிர்:

பிரேசிலில் ஒரேநாளில் 85,149 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
இதுகுறித்து அந்நாட்டில் சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 85,149 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,72,96,118ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் கரோனாவுக்கு இன்று மேலும் 2,216 பேர் பலியானார்கள். 
இதன்மூலம் மொத்த பலி எண்ணிக்கை 4,84,235ஆக உயர்ந்துள்ளது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
கரோனா அதிகம் பாதித்த நாடுகளின் பட்டியலில் பிரேசில் 3ஆம் இடத்தில் உள்ளது. அதேவேளையில் பலி எண்ணிக்கையை பொறுத்தவரையில் அமெக்காவுக்கு அடுத்த இடத்தில் அந்நாடு உள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.