இந்தோனேசியாவில் ரிக்டர் 6.1 அளவில் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுப்பு 
உலகம்

இந்தோனேசியாவில் ரிக்டர் 6.1 அளவில் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுப்பு

இந்தோனேசியாவின் மாலுகு தீவுகள் பகுதியில் புதன்கிழமை வலிமையான நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

DIN

இந்தோனேசியாவின் மாலுகு தீவுகள் பகுதியில் புதன்கிழமை வலிமையான நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்தோனேசியாவின் வடக்கு மாலுகு தீவுகள் பகுதியில் புதன்கிழமை வலிமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 10.13 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவானது. 

10 கி.மீ ஆழத்தில் உணரப்பட்ட இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த விவரங்கள் வெளியாகவில்லை. இதே பகுதியில் கடந்த ஜூன் 3ஆம் தேதி ரிக்டர் 6.0 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் நிலநடுக்க பாதிப்பால் மாலுகு தீவுகள் பகுதியில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மக்கள் கடற்கரை பகுதிகளில் இருந்து வெளியேறி உயரமான பகுதிக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜனநாயகன் இசைவெளியீடு! இந்திய சினிமாவில் முதல்முறை! | Cinema Updates | Dinamani Talkies

வித் லவ் பாடல் புரோமோ!

விபி - ஜி ராம் ஜி மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! கார்கள் மீது மோதிய லாரி! | CBE

”ஏழைகளும் பாஜகவிற்கு சம்பந்தமில்லை!” 100 நாள் வேலைத்திட்டம் பெயர் மாற்றம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின்

SCROLL FOR NEXT