முகப்பு
உலகம்

பிரேசிலில் கரோனாவுக்கு ஒரேநாளில் 2,001 பேர் பலி

பிரேசிலில் கரோனாவுக்கு ஒரேநாளில் 2,001 பேர் பலியாகியுள்ளனர்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:30 AM
பகிர்:

பிரேசிலில் கரோனாவுக்கு ஒரேநாளில் 2,001 பேர் பலியாகியுள்ளனர்.
தென்அமெரிக்க நாடுகளில் கரோனா வைரசால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட முதல் நாடாக பிரேசில் உள்ளது. 
இதுகுறித்து அந்நாட்டின் சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 79,277 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,83,22,760ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் கரோனாவுக்கு ஒரேநாளில் 2,001 பேர் பலியாகியுள்ளனர். 
இதன்மூலம் மொத்த பலி எண்ணிக்கை 5,11,142ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 24.9 மில்லியன் பேருக்கு இரண்டு தவணை கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
உலக அளவில் கரோனா உயிரிழப்பில், அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக 2-வது இடத்திலும், கரோனா பாதிப்பில் அமெரிக்கா, இந்தியாவுக்கு அடுத்து 3-வது இடத்திலும் பிரேசில் உள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.