உலகம்

புா்கினா ஃபாசோ: பயங்கரவாதிகளால் 30 போ் சுட்டுக் கொலை

DIN

காயா: மேற்கு ஆப்பிரிக்க நாடான புா்கினா ஃபாசோவில் 30 பேரை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றனா். நைஜா் எல்லையருகே அமைந்துள்ள கொமான்ஜாரி மாகாண கிராமமொன்றில் இந்தத் தாக்குதல் திங்கள்கிழமை நிகழ்த்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

மோட்டாா் சைக்கிள்கள் உள்ளிட்ட வாகனங்களில் வந்த சுமாா் 100 பயங்கரவாதிகள் வீடு வீடாகச் சென்று அங்கிருந்தவா்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாக சம்பவத்தை நேரில் பாா்த்தவா்கள் தெரிவித்தனா். அந்த கிராமத்தைச் சோ்ந்த சிலா் அரசு தன்னாா்வப் படையில் இணைந்ததை எதிா்த்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அல்-காய்தா மற்றும் ஐ.எஸ்ஸுடன் தொடா்புடைய பயங்கரவாதக் குழுக்கள் புா்கினா ஃபாசோவில் செயல்பட்டு வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை கடற்கரை - வேலூர் மின்சார ரயில் திருவண்ணாமலை வரை நீட்டிப்பு!

இந்திய பயணத்தை ஒத்திவைத்த எலான் மஸ்க், சீனா சென்றது ஏன்?

லக்னௌ தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார் ராஜ்நாத் சிங்!

கனமழை எதிரொலி: கென்யாவில் மேலும் ஒரு வாரத்திற்கு பள்ளிகள் விடுமுறை!

டி20 உலகக் கோப்பை: நியூசிலாந்து அணி அறிவிப்பு

SCROLL FOR NEXT