‘பாலஸ்தீன குழந்தை வகுப்பறையில் இருக்க வேண்டுமே தவிர இடிபாடுகளில் அல்ல’: மலாலா
பாலஸ்தீன குழந்தைகள் வகுப்பறைகளுக்குள் இருக்க வேண்டுமே தவிர இடிபாடுகளுக்கு நடுவே அல்ல என நோபல் பரிசு பெற்ற கல்வி செயற்பாட்டாளர் மலாலா தெரிவித்துள்ளார்.
பாலஸ்தீன குழந்தைகள் வகுப்பறைகளுக்குள் இருக்க வேண்டுமே தவிர இடிபாடுகளுக்கு நடுவே அல்ல என நோபல் பரிசு பெற்ற கல்வி செயற்பாட்டாளர் மலாலா தெரிவித்துள்ளார்.
இஸ்லாமியா்களின் புனித மாதமான ரம்ஜான் தொடங்கியதிலிருந்து ஜெருசலேமில் இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையே பிரச்னை தொடா்ந்து வருகிறது. இஸ்ரேல் ராணுவத்துக்கும், ஹமாஸ் இயக்கத்தினருக்கும் இடையேயான மோதலில் இரு தரப்பிலும் உயிரிழப்பு எண்ணிக்கை 49-ஆக உயா்ந்துள்ளது.
இந்நிலையில் இதுதொடர்பாக தனது சுட்டுரைப் பக்கத்தில் விடியோ வெளியிட்டுள்ள நோபல் பரிசு பெற்ற பெண் கல்வி செயற்பாட்டாளர் மலாலா, “பாலஸ்தீன குழந்தைகள் பள்ளி வகுப்பறைகளுக்குள்ளே இருக்க வேண்டுமே தவிர கட்டட இடிபாடுகளுக்கு நடுவில் அல்ல” எனத் தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement
மேலும், “இந்த மனித உரிமைப் பிரச்னையில் உலக நாடுகள் உடனடியாகத் தலையிட்டு அமைதியை நிலைநாட்ட வேண்டும்” என மலாலா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்த விவகாரம் தொடா்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் இரண்டாவது முறையாக புதன்கிழமை அவசரமாக கூடி ஆலோசித்தது. இருப்பினும் அறிக்கை எதையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.