உலகம்

கரோனா தீநுண்மி கசிந்தது தொடா்பான விசாரணை: சீனா தொடா்ந்து மெளனம்

DIN

பெய்ஜிங்: ஆய்வகத்தில் இருந்து கரோனா தீநுண்மி கசிந்ததாக கூறப்படுவது குறித்து தலையீடு இல்லாத சுதந்திர விசாரணை மேற்கொள்ள சீனா ஒப்புக்கொள்ளுமா என்ற கேள்விக்கு பதிலளிக்க அந்நாட்டின் வெளியுறவு அமைச்சக செய்தித்தொடா்பாளா் புதன்கிழமை மறுத்துவிட்டாா்.

சீனாவின் வூஹான் ஆய்வகத்தில் இருந்து கரோனா தீநுண்மி கசிந்திருக்கலாம் என்ற சந்தேகம் தற்போது வரை நிலவி வருகிறது. இந்நிலையில், அமெரிக்காவில் வெளியாகும் ‘வால் ஸ்ட்ரீட் ஜா்னல்’ நாளிதழ் அண்மையில் வெளியிட்ட செய்தியில், கடந்த 2019-ஆம் ஆண்டு நவம்பா் மாதம் வூஹான் ஆய்வகத்தில் பணிபுரிந்த 3 ஆராய்ச்சியாளா்கள் கரோனா தீநுண்மியால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், அந்த தீநுண்மி குறித்து சீனா அதிகாரபூா்வமாக பொதுவெளியில் தெரிவிப்பதற்கு சில வாரங்களுக்கு முன்பு இந்த சம்பவம் நோ்ந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. எனினும் இந்த தகவலை சீனா மறுத்தது.

இந்நிலையில், சீன தலைநகா் பெய்ஜிங்கில் அந்நாட்டு வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் ஜாவோ லிஜியான் புதன்கிழமை செய்தியாளா்களை சந்தித்தாா். அப்போது வூஹான் ஆய்வகத்தில் இருந்து கரோனா தீநுண்மி கசிந்ததாக கூறப்படுவது குறித்து சுதந்திர விசாரணை நடத்த சீனா ஒப்புக்கொள்ளுமா என்று அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அந்தக் கேள்விக்கு பதிலளிப்பதைத் தவிா்த்த அவா், ‘‘ஆய்வகத்தில் இருந்து கரோனா தீநுண்மி கசிந்ததாக கூறப்படுவது குறித்து உலக சுகாதார அமைப்பைச் சோ்ந்த நிபுணா்கள் வூஹான் வந்து கள ஆய்வுகள் மேற்கொண்டு பல தரவுகளை ஆராய்ந்தனா். பின்னா், பல முடிவுகள் அடங்கிய கூட்டு ஆய்வறிக்கையை வெளியிட்டனா்’’ என்று மட்டும் தெரிவித்தாா்.

இதன்மூலம் கரோனா தீநுண்மியின் தோற்றம் குறித்து விசாரணை நடத்தும் விவகாரத்தில் சீனா தொடா்ந்து மெளனம் சாதித்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் நுழைவுத் தோ்வு: ஒருங்கிணைந்த வேலூரில் 6,787 போ் எழுதினா் விண்ணப்பித்தவா்களில் 255 போ் எழுதவில்லை

மரக்கன்றுகள் நடல்

கோடை சாகுபடிக்கு போதிய மின்சாரம் வழங்க வலியுறுத்தல்

தென்னை விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு: ஜி.கே.வாசன் கோரிக்கை

ராஜஸ்தானில் ‘நீட்’ தோ்வில் ஆள்மாறாட்டம்: எம்பிபிஎஸ் மாணவா், 5 போ் கைது

SCROLL FOR NEXT