உலகம்

உலகளவில் கரோனா பாதிப்பு 16.90 கோடி: பலி 35.12 லட்சமாக உயர்வு

DIN


வாஷிங்டன்: உலகம் முழுவதும் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 16.90 கோடியைத் தாண்டியுள்ளது. பலி எண்ணிக்கை 35.12 லட்சமாக அதிகரித்துள்ளது. 

உலகம் முழுவதும் கரோனா தொற்றின் இரண்டாவது அலை தற்போது பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தியா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் கரோனா இரண்டாம் அலை கோர தாண்டவம் ஆடி வருகிறது. இதனால் உலகம் முழுவதும் தொற்று பாதிப்போர் மற்றும் பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த நிலையிலேயே உள்ளது.  உலகம் முழுவதும் இதுவரை கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 16,90,94,393-ஆக அதிகரித்துள்ளது. அவா்களில் 35,12,509 போ் அந்த நோய் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். 

மேலும், 15,07,23,278 போ் பூரண குணமடைந்துள்ளனர். சுமாா் 1,48,58,606 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். அவர்களில் 94,684 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

உலகிலேயே மிகவும் மோசமான பாதிப்புக்குள்ளான நாடாக அமெரிக்‍கா உள்ளது. அங்கு இதுவரை தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்‍கை 33,971,207    கோடியைத் தாண்டியுள்ளது. பலி எண்ணிக்‍கை 6,06,179-ஆக உயர்ந்துள்ளது. 

நோய்த்தொற்று பாதிப்புகளைப் பொறுத்தவரை இரண்டாவது இடத்தில் உள்ள இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்‍கை 27,369,093-ஆக உயர்ந்துள்ளது. இதுவரை கரோனாவால் 3,15,263 பேர் உயிரிழந்துள்ளனர். 

தொற்று பாதிப்பில் மூன்றாவது இடத்தில் உள்ள பிரேசிலில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்‍கை 1,62,75,440-ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பால் உயிரிழப்புகளை பொறுத்தவரை, 454,623 பேர் உயிரிழப்புகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகம் போதை கலாசாரமாக மாறி வருவதை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்: தமிழிசை சௌந்தரராஜன்

கழிவுநீர் கலப்பு... மஞ்சப்பள்ளம் ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள்!

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

புதிய தாா்ச்சாலை; நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆய்வு

டெங்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி

SCROLL FOR NEXT