முகப்பு
உலகம்

சீன தம்பதிகள் 3 குழந்தைகள் வரை பெற்றுக் கொள்ள அனுமதி

இதுவரை இரண்டு குழந்தைகள் மட்டுமே பெற்றுக் கொள்ள அனுமதியிருந்த நிலையில், தற்போது ஒரு தம்பதி மூன்று குழந்தைகள் பெற்றுக் கொள்ள அனுமதி வழங்கியுள்ளது.

Updated On : 31 மே, 2021 at 3:28 PM
சீன தம்பதிகள் 3 குழந்தைகள் வரை பெற்றுக் கொள்ள அனுமதி
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:50 AM


பெய்ஜிங்: சீன தம்பதிகள் குழந்தை பெற்றுக் கொள்வதற்கு தளர்வினை அறிவித்திருக்கும் ஆளும் கம்யூனிஸ்ட் அரசு, இதுவரை இரண்டு குழந்தைகள் மட்டுமே பெற்றுக் கொள்ள அனுமதியிருந்த நிலையில், தற்போது ஒரு தம்பதி மூன்று குழந்தைகள் பெற்றுக் கொள்ள அனுமதி வழங்கியுள்ளது.

சீனாவில் சமீபத்தில் எடுக்கப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, சீனாவில் வேலை செய்யும் மக்களின் எண்ணிக்கை கடந்த சில பத்தாண்டுகளில் குறைந்து வருவதாகவும், 65 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதானவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாகவும், இது பொருளாதாரம் மற்றும் சமூகத்தில் மிகப்பெரிய சுமையை ஏற்படுத்தும் என்றும் தெரிய வந்தது.

நாட்டில் கடுமையான மக்கள் தொகை அதிகரிப்பைத் தொடர்ந்து கடந்த 1980-ஆம் ஆண்டு முதல் சீனத்தில் தம்பதியர் குழந்தைப் பெற்றக் கொள்ள கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில் அது முதல் நாட்டில் வேலை செய்யும் வயதுடைய மக்கள் தொகை வெகுவாகக் குறைந்துவந்தது.

Advertisement

இது குறித்து ஆளும் கட்சி நடத்திய உயர்நிலைக் குழுக் கூட்டத்தில் நாட்டில் நடைமுறையிலிருக்கும் சில முக்கியக் கொள்கைகளில மாற்றங்களை ஏற்படுத்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு தம்பதி 3 குழந்தைகள் பெற்றுக் கொள்ள அனுமதிப்பது என்று கட்சித் தலைவர்கள் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.