உலகம்

பாகிஸ்தான்-பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 22 பேர் பலி, 8 பேர் காயம்

DIN

பாகிஸ்தானின் சத்நோதி மாவட்டத்தில் பள்ளத்தாக்கில் பயணிகள் பேருந்து கவிழ்ந்ததில் 22 பேர் பலியாகியிருக்கிறார்கள்.

காஷ்மீரை ஒட்டிய பாகிஸ்தான் மாவட்டமான சத்நோதியில் 40 பயணிகளைக் ஏற்றிக்கொண்டு தெசில் பகுதியிலிருந்து பலூச் நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்து திடிரென இயந்திரக் கோளாரு காரணமாகக் கட்டுப்பாட்டை இழந்து 500 மீட்டர் பள்ளத்தாக்கில் விழுந்து விபத்திற்குள்ளானதில் 22 பேர் பலியானதோடு 8 பேர் படுகாயம் அடைந்திருக்கிறார்கள்.

இதுகுறித்து பூஞ்ச்  துணை காவல்துறைத் தலைவர் ரஷித் நயிம் கான் , ‘ விபத்தில் 22 பேர் பலியாகியிருக்கிறார்கள். காயமடைந்த 8 பேரில் 5 பேர் கொட்லி மாவட்டத்திற்கும் மீதம் இருப்பவர்கள் பலூச் மாவட்டத்திற்கும் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார்கள்’ எனத் தெரிவித்தார்.

முன்னதாக  கடந்த மாதம் பூஞ்ச் மற்றும் நீலும் மாவட்டத்தில் நடந்த விபத்துகளில் 4 மாணவர்கள் உயிரிழந்ததோடு 32 பேர் காயமடைந்திருக்கிறார்கள் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மறுமதிப்பீடு, மறுதேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பம்

பிளஸ் 2 தேர்வு: பள்ளிகள் வாரியாக தேர்ச்சி விகிதம்

பிளஸ் 2 முடிவுகள்: திருப்பூர் முதலிடம்.. டாப் 5 மாவட்டங்கள்?

பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: பாட வாரியாக நூற்றுக்கு நூறு பெற்ற மாணவர்கள்

பிளஸ் 2 தோ்வு முடிவுகள் வெளியீடு: 94.56% பேர் தேர்ச்சி!

SCROLL FOR NEXT