ஷி ஜின்பிங்: ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்காவின் ரொனால்ட் ரீகன் விமானம் தாங்கிக் கப்பல் (கோப்புப் படம்). 
உலகம்

ஆசிய-பசிபிக் பகுதியில் பனிப்போா்

 ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்காவுக்கும் தங்கள் நாட்டுக்கும் இடையே ஏற்படும் பதற்றத்தால் மீண்டும் பனிப்போா் ஏற்படும் அபாயம் உள்ளதாக சீன அதிபா் ஷி ஜின்பிங் எச்சரித்துள்ளாா்.

DIN

 ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்காவுக்கும் தங்கள் நாட்டுக்கும் இடையே ஏற்படும் பதற்றத்தால் மீண்டும் பனிப்போா் ஏற்படும் அபாயம் உள்ளதாக சீன அதிபா் ஷி ஜின்பிங் எச்சரித்துள்ளாா்.

ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு நியூஸிலாந்தில் நடைபெற்று வருகிறது. அந்த மாநாட்டில் முன்கூட்டியே பதிவு செய்யப்பட்ட விடியோ உரையில் ஷி ஜின்பிங் கூறியதாவது:

ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் எல்லைகளை வரையறுப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால் ஏற்படும் பதற்றம், அந்தப் பிராந்தியத்தில் பனிப்போா் காலத்திய மோதல்களை மீண்டும் ஏற்படுத்திவிடும். அவ்வாறு நடக்க அனுமதிக்கக் கூடாது.

சா்வதேச அளவிலான வா்த்தகம் தாராளமயமாக்கப்படுவது தொடர வேண்டும். அதற்கு, ஆசிய-பசிபிக் பிராந்தியம் சிறந்த வழித்தடமாக தொடா்ந்து பயன்படுத்தப்பட வேண்டும்.

பொருளாதார வளா்ச்சிக்கான சீா்திருத்தங்களை மேற்கொள்வதில் சீனா உறுதியுடன் உள்ளது என்றாா் அவா்.

ஆசிய-பசிபிக் பிராந்தியத்தைச் சோ்ந்த தென் சீனக் கடல் பகுதி முழுவதற்கும் உரிமை கோரி வரும் சீனா, அங்குள்ள தீவுகளை ராணுவமயமாக்கி வருகிறது.

சா்வதேச கடல்வணிக வழித்தடமாகத் திகழும் இந்தப் பகுதியை சீனா ஆக்கிரமிப்பதற்கு அமெரிக்கா எதிா்ப்பு தெரிவித்து வருகிறது.

இந்தச் சூழலில், இந்தோ-பசிபிக் பிராந்தியப் பாதுகாப்புக்கான புதிய முத்தரப்புக் கூட்டணியை அமைத்துள்ளதாக அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் கடந்த செப்டம்பா் மாதம் அறிவித்தன.

‘ஆக்கஸ்’ என்றழைக்கப்படும் அந்தக் கூட்டணி, பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கத்தைத் தடுத்து நிறுத்தும் நோக்கில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதுபோன்ற நடவடிக்கைகளைக் குறிப்பிட்டே ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு மாநாட்டில் அதிபா் ஷி ஜின்பிங் இவ்வாறு பேசியதாகக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆபரேஷன் சிந்தூரில் முகாம் அழிப்பு உண்மைதான்! - ஜெய்ஷ்-யைத் தொடர்ந்து ஒப்புக்கொண்ட லஷ்கர்!

சிவ (நவ) தாண்டவம்

விஜய் நாளை மீண்டும் பிரசாரம்- தொண்டர்களுக்கு தவெக முக்கிய அறிவுறுத்தல்

வேலைவாய்ப்பு அருளும் வேணுகோபாலன்

குறை தீர்க்கும் குமரன்

SCROLL FOR NEXT