உலகம்

17 மாதங்களில் இல்லாத அளவுக்கு கரோனா அதிகரிப்பு; பெய்ஜிங்கில் நிகழ்ச்சிகள் ரத்து

DIN

பெய்ஜிங்கில் கடந்த 17 மாதங்களில் இல்லாத அளவுக்கு, சமீபத்தில் ஏற்பட்ட கரோனா அலை அதன் பாதிப்பை அதிகப்படுத்தியுள்ளது. இதன் காரணமாக, பெய்ஜிங் நகரம் முடங்கியுள்ளது. எனவே, நிகழ்ச்சிகளையும் பணியையும் இணையம் மூலம் நடத்த அலுவலர்கள் அறிவுறித்தியுள்ளனர்.

சீனாவின் தலைநகரான பெய்ஜிங்கில் ஒரே நாளில் ஏழு பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், சுகாதாரத்துறை சார்பாக வியாழக்கிழமை செய்தியாளர் சந்திப்பு நடத்தப்பட்டது.

அதில், அவசியம் இல்லாத அனைத்து மாநாடுகளையும் நிறுவனங்கள் ரத்து செய்ய வேண்டும் என அப்போது அறிவுறத்தப்பட்டது. அதேபோல, மக்கள் கூடுவதை பெருமளவு தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், அதை மீறியும் நிகழ்ச்சிகளை நடத்தினால் அந்நிறுவனங்களும் தனிநபர்களுமே காரணம் எனக் கூறப்பட்டுள்ளது. பெய்ஜிங்கில் சமீபத்திய கரோனா அலை காரணமாக மொத்தமாக 45 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 2020 ஜூன் மாதத்திலிருந்து தற்போது வரையிலான காலக்கட்டத்தில், இதுவே அதிகப்படியான கரோனா எண்ணிக்கையாகும்.

கடந்த ஐந்து மாதங்களாக, அதிக பரவல் தன்மை கொண்ட டெல்டா வகை கரோனாவால் ஏற்பட்ட அலையை கட்டுப்படுத்த முடியாமல் சீனா திணறி வருகிறது. நாடு முழுவதும் 21 மாகாணங்களில், 1000க்கும் மேற்பட்டோருக்கு உள்ளூரிலிருந்தே கரோனா பரவியுள்ளது. வூஹானிலிருந்து கரோனா பரவ தொடங்கிய காலத்திலிருந்து பார்த்தால், இந்தளவுக்கு கரோனா பரந்து விரிந்து பரவியதே இல்லை.

இதுகுறித்து நகர அரசின் செய்தித்தொடர்பாளர் சூ ஹெஜியான் கூறுகையில், "பெய்ஜிங்கில் சமீபத்திய அலை வேகமாக வந்து அதிக எண்ணிக்கையிலான மக்களை பாதித்து, நோயின் பரவலான பாதையை உருவாக்கியது. குறிப்பாக, இதன் காரணமாக, பரவலை கட்டுப்படுத்துவது கடினமாக உள்ளது" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவிஷீல்டு தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அறிவிப்பு!

வேங்கைவயல் விவகாரம்: மேலும் 3 பேருக்கு இன்று குரல் மாதிரி சோதனை

சவுக்கு சங்கர் மீது சென்னை காவல்துறையும் வழக்கு!

வெப்ப அலை: தொழிலாளா்கள் பாதிக்காத வகையில் பணி நேரம்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT