அதிகரிக்கும் கரோனா பரவல்: நெதர்லாந்தில் பொதுமுடக்கம் அறிவிப்பு 
உலகம்

அதிகரிக்கும் கரோனா பரவல்: நெதர்லாந்தில் பொதுமுடக்கம் அறிவிப்பு

அதிகரித்துவரும் கரோனா பரவலைத் தடுக்க நெதர்லாந்து நாட்டில் கட்டுப்பாடுகளுடன் கூடிய பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

அதிகரித்துவரும் கரோனா பரவலைத் தடுக்க நெதர்லாந்து நாட்டில் கட்டுப்பாடுகளுடன் கூடிய பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் பல்வேறு நாடுகளில் கரோனா பரவல் கட்டுக்குள் வந்தாலும் தொற்று பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தற்போதும் பின்பற்றப்பட்டு வருகின்றன. கரோனா தொற்று அலைகள் பாதிப்பு சில நாடுகளில் மீண்டும் தலைதூக்கியுள்ள நிலையில் கட்டுப்பாடுகளுடன் கூடிய பொதுமுடக்கத்தை அந்நாடுகள் அமல்படுத்தி வருகின்றன. அந்த வரிசையில் தற்போது நெதர்லாந்தும் இணைந்துள்ளது.

நெதர்லாந்தில் அதிகரித்துவரும் கரோனா பரவலைத் தடுக்கும் விதமாக பொதுமுடக்கத்தை வெள்ளிக்கிழமை அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து உணவு மற்றும் மதுபான விடுதிகளை முன்கூட்டியே மூடவும், விளையாட்டு அரங்கங்களில் பார்வையாளர்களுக்கு தடை விதித்தும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதேசமயம் பள்ளிகள் மற்றும் திரையரங்குகளுக்கு பொதுமுடக்கக் கட்டுப்பாடுகளிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது.

இதற்கான அறிவிப்பை வெள்ளிக்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் பிரதமர் மார்க் ரூட் வெளியிட்டார். நெதர்லாந்தில் இதுவரை 22.53 லட்சம் பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 16300 பேர் கரோனா தொற்று பாதிப்புக்குள்ளாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கேரளத்தில் சிறுத்தையிடம் இருந்து 4 வயது மகனைக் காப்பாற்றிய தந்தை !

3 கோடி பார்வைகளைக் கடந்த பொட்டல முட்டாயே பாடல்!

வைல்ட் ஃபிளவர்... அமைரா தஸ்தூர்!

நயினார் நாகேந்திரனை ஓபிஎஸ் குற்றம் சொல்வதை ஏற்றுக்கொள்ள மாட்டோம்: தமிழிசை

மேட்டூரில் ஆடிப்பெருக்கு விழா: புனித நீராட குவிந்த மக்கள்!

SCROLL FOR NEXT