முகப்பு
உலகம்

ரஷியாவில் ஒரேநாளில் கரோனாவுக்கு 1,251 பேர் பலி

ரஷியாவில் ஒரேநாளில் கரோனாவுக்கு 1,251 பேர் பலியாகியுள்ளனர். 

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:35 AM
பகிர்:

ரஷியாவில் ஒரேநாளில் கரோனாவுக்கு 1,251 பேர் பலியாகியுள்ளனர். 
இதுகுறித்து அந்நாட்டின் சுகதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 37,374 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் 2,617 அறிகுறியற்ற தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
அதிகபட்சமாக மாஸ்கோவில் 4,062 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 9,219,912ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் கரோனாவால் இன்று மேலும் 1,251 பேர் பலியானார்கள். இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 260,335ஆக உயர்ந்துள்ளது. 

கரோனாவிலிருந்து இன்று 36,414 பேர் மீண்டனர். இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 7,919,250ஆக உயர்ந்துள்ளது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.