உலகம்

இந்தியர்களுக்கு கரோனா தளர்வுகளை அறிவித்தது சிங்கப்பூர்

DIN

இரண்டு தவணை தடுப்பூசி எடுத்துக் கொண்ட இந்தியர்கள் சிங்கப்பூர் பயணித்தால் இனி தனிமைப்படுத்தல் கிடையாது என சிங்கப்பூர் அரசு தளர்வுகளை அறிவித்திருக்கிறது.

கரோனா பரவல் காரணமாக பல்வேறு நாடுகளிலும் வெளிநாட்டுப் பயணிகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கிறது. தற்போது தொற்றின் தீவிரம் குறைந்து வருவதாலும் தடுப்பூசிகள் செலுத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாலும் சில நாடுகள் பயணிகளுக்கு சில தளர்வுகளை அறிவித்து வருகிறார்கள்.

அந்த வகையில் அண்டை நாடான சிங்கப்பூரில் இந்தியாவில் இருந்து வரும் பயணிகள் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியிருந்தால் தனிமைப்படுத்துதல் கிடையாது என புதிய தளர்வை அறிவித்திருக்கிறார்கள்.

இந்தத் தளர்வு வருகிற நவ.29 ஆம் தேதியிலிருந்து அமலுக்கு வருகிறது. மேலும் கத்தார், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் இருந்து சிங்கப்பூர் வருவோரும் டிசம்பர் 6 ஆம் தேதி முதல் கட்டாய தனிமைப்படுத்துதல் இல்லாமல் அனுமதிக்கப்படுவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

SCROLL FOR NEXT