இலங்கையில் படகு கவிழ்ந்ததில் 6 மாணவர்கள் பலி; 11 பேர் காயம்; மீட்புப்பணி தீவிரம்
இலங்கையில் படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் பள்ளி மாணவர்கள் 6 பேர் உயிரிழந்தனர்.
இலங்கையில் படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் பள்ளி மாணவர்கள் 6 பேர் உயிரிழந்தனர்.
இலங்கையில் திரிகோணமலை மாவட்டம் கின்னியா பகுதியில் குறிஞ்சங்கேணி பாலம் அருகே படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் 20 க்கும் மேற்பட்டோர் பயணித்த நிலையில் படகு கவிழ்ந்ததில் அனைவரும் நீருக்குள் மூழ்கினர். இதில் பள்ளி மாணவர்கள் 6 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 11 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து இலங்கை கடற்படை மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகிறது.
படகில் சென்ற அனைவருமே பள்ளி மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மீட்கப்பட்ட சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் உயிர்ப்பலி அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
பள்ளி மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.