உலகம்

ஒரே மாதத்தில் 4 ஏவுகணை சோதனைகளை நடத்திய வடகொரியா

DIN

வடகொரியா கடந்த ஒரே மாதத்தில் 4 ஏவுகணை சோதனைகளை வெற்றிகரமாக சோதித்துள்ளது.

வடகொரியா நாடானது அமெரிக்க அச்சுறுத்தலுக்கு மத்தியில் அதிநவீன ஆயதங்களைத் தயாரித்து வருகிறது. ஏவுகணைகள், ரேடார் போன்றவற்றின் மூலம் போர் செயல்திறனை அதிகரிக்கும் வகையில் வடகொரியா செயல்பட்டு வருகிறது. 

இந்நிலையில் வியாழக்கிழமை ஏவுகணையை இடைமறித்து தாக்கும் வகையிலான அதிநவீன ஏவுகணையை சோதித்துள்ளது. ஏவுகணை சோதனை குறித்த மேலதிக தகவல்கள் வெளியாகவில்லை. 

முன்னதாக கடந்த மாதத்தில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளையும், அணுசக்திதிறன் கொண்ட ஏவுகணையையும் வடகொரியா சோதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச அமைப்புகளின் எச்சரிக்கைகளையும் மீறி வடகொரியா மேற்கொண்டு வரும் இந்த ஏவுகணை சோதனையால் உலக அரசியல் பரபரப்பு நீடித்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தனக்குத்தானே பிரசவம்- குழந்தையைக் கொன்ற செவிலியர் கைது

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழைப்பொழிவு விவரம்!

பாஜகவின் இஸ்லாமிய வெறுப்பு... கண்டுகொள்ளாத தேர்தல் ஆணையம்!

ரோமியோ ஓடிடி தேதி!

நெல்லை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமாரின் உடல் நல்லடக்கம்

SCROLL FOR NEXT