9 மாதங்களுக்குப் பிறகு ரஷியாவில் அதிகரிக்கும் கரோனா!
ரஷியாவில் கடந்த 9 மாதங்களில் இல்லாத அளவுக்கு இன்று கரோனா பாதிப்பு அதிகமாகப் பதிவாகியுள்ளது.
ரஷியாவில் கடந்த 9 மாதங்களில் இல்லாத அளவுக்கு இன்று கரோனா பாதிப்பு அதிகமாகப் பதிவாகியுள்ளது.
ரஷியாவில் இன்றைய கரோனா பாதிப்பு குறித்து அந்நாட்டின் சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில்,
ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 27,550 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு 76,90,110 ஆக உயர்ந்துள்ளது.
மேலும், நேற்று மட்டும் 924 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 213,549 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று ரஷியாவில் கரோனா பலி 929 ஆகவும் பாதிப்பு 25,133 ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
தலைநகர் மாஸ்கோவில் நேற்றைய பாதிப்பு 3,589 ஆக இருந்த நிலையில் இன்று 5,404 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்ட்டுள்ளது.
ரஷியாவில் கடந்த டிசம்பர் 31 அன்று ஒருநாள் பாதிப்பு 27,747 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போதைய நிலவரப்படி 6.77,331 பேர் கரோனா சிகிச்சையில் உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவிலிருந்து 20,330 பேர் குணமடைந்தனர். இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 67,99,230 ஆக உயர்ந்துள்ளது.