உலகம்

ஹவாயில் அடுத்தடுத்து இருமுறை சக்திவாய்ந்த நிலநடுக்கம்

DIN

ஹவாய் தீவின் கடற்கரைப் பகுதியில் அடுத்தடுத்து இரு முறை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 

ஹவாய் தீவின் நாலேஹூ பகுதிக்கு 29 கிமீ தொலைவில் 20 நிமிட இடைவெளியில் ஏற்பட்ட அடுத்தடுத்த நிலநடுக்கங்கள் முறையே 6.1, 6.2 என்ற அளவில் ரிக்டர் அளவுகோலில் பதிவாகின. 

இந்திய நேரப்படி இன்று அதிகாலை 3.18 மணிக்கு(ஞாயிறு 21.48 GMT) இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் குலுங்கியுள்ளன. உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை. 

இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் இத்தகவலை வெளியிட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாய் சுதர்ஷன், ஷாருக்கான் அதிரடி: பெங்களூருவுக்கு 201 ரன்கள் இலக்கு!

’மன் கி பாத்’க்கு இந்த தேர்தலுடன் முடிவுரை -அகிலேஷ் யாதவ்

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

அமெரிக்கா: இஸ்ரேல் - ஹமாஸ் போரை நிறுத்தக்கோரி போராட்டம்

மேற்கு வங்கத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் பாஜகவுக்கு உதவுகின்றன: மம்தா

SCROLL FOR NEXT