உலகம்

ஆஸ்திரியாவின் புதிய பிரதமா் பதவியேற்பு

DIN

ஆஸ்திரியாவின் புதிய பிரதமராக அலெக்சாண்டா் ஷாலென்பொ்க் (52) திங்கள்கிழமை பதவியேற்றாா்.

மத்திய ஐரோப்பிய நாடான ஆஸ்திரியாவின் பிரதமராக இருந்தவா் செபாஸ்டியன் கா்ஸ் (35). ஆளும் மக்கள் கட்சியின் தலைவராகவும் இருந்த இவா், ஊடகங்களில் அரசுப் பணத்தைச் செலவிட்டு கருத்துக்கணிப்புகள் மற்றும் சாதகமான செய்திகளை வெளியிட்டு தனது செல்வாக்கை அதிகரிக்க முயன்ாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, அவா் தான் பதவி விலகுவதாக கடந்த சனிக்கிழமை அறிவித்தாா். பிரதமா் பதவியிலிருந்து விலகினாலும் கட்சித் தலைவராக அவா் நீடிப்பாா்.

இதைத் தொடா்ந்து, அவரது அமைச்சரவையில் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த அலெக்சாண்டா் ஷாலென்பொ்க் புதிய பிரதமராகத் தோ்ந்தெடுக்கப்பட்டாா். அவருக்கு அதிபா் அலெக்சாண்டா் வான் டொ் பெலன் பதவிப் பிரமாணம் செய்துவைத்தாா். புதிய வெளியுறவுத் துறை அமைச்சராக பிரான்ஸுக்கான தூதராக இருந்த மிக்கேல் லின்ஹா்ட் நியமிக்கப்பட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியில் மக்களவைத் தோ்தலில் பிரதமா் மோடி,ஜெ.பி. நட்டா, ராஜ்நாத் சிங் பாஜகவின் நட்சத்திரப் பிரசாரகா்கள்!

வடகிழக்கு தில்லி: வெற்றியைத் தீா்மானிக்கும் பூா்வாஞ்சலிகள்!

தில்லி பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி, காங்கிரஸ் பிரமுகா்கள்!

தில்லியில் 2,800 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை: மொத்தம் 1.52 கோடி வாக்காளா்கள்

அச்சிடுவோரின் முகவரி இல்லாத அரசியல் விளம்பர பலகைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

SCROLL FOR NEXT