உலகம்

பிலிப்பின்ஸில் வெள்ளம்: 9 பேர் பலி

DIN

பிலிப்பின்ஸ் நாட்டில் பெய்துவரும் கனமழை காரணமாக இதுவரை 9 பேர் பலியாகியுள்ளனர். மேலும் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட நிலச்சரிவில் இதுவரை 11 பேர் காணாமல் போயுள்ளனர்.

பிலிப்பின்ஸ் நாட்டில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்துவருகிறது. இந்த திடீர் மழைப்பொழிவால் வடக்கு பிலிப்பின்ஸானது கடுமையான சேதங்களை சந்தித்துள்ளது.

வெப்பமண்டல புயல் தென் சீனக் கடலில் காகயன் மாகாணத்திற்கு மேற்கே சுமார் 315 கிலோமீட்டர் தூரத்தில் மணிக்கு 100 கிலோமீட்டர் (62 மைல்) வேகத்தில் காற்று வீசியதாக வானிலை அதிகாரிகள் தெரிவித்தனர். பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் சாலைகளில் மரங்கள் விழுந்துள்ளதால் போக்குவரத்து தடைபட்டுள்ளது. மேலும் மின்சார வசதி துண்டிக்கப்பட்டுள்ளதால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

மழைவெள்ளத்தால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பெங்குவாட் பகுதியில் ஒரு காவலர் உள்பட 5 பேர் பலியாகினர். மேற்கு பலவான் மாகாணத்தில் உள்ள நர்ரா நகரில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் காணாமல் போன 4 பேரைத் தேடும் பணிகள் நடைபெற்று வருகிறது. கடும்வெள்ளம் காரணமாக 1600க்கும் மேற்பட்டவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.  ஒவ்வொரு ஆண்டும் சுமார் 20 புயல்கள் பிலிப்பின்ஸைத் தாக்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓட்டுநர் இல்லாமல் இயங்கும் கனரக வாகனங்கள்!

வரப்பெற்றோம் (29-04-2024)

ஏன் கவர்ச்சி? மாளவிகா மோகனன் பதில்!

நடிகர் படத்தின் டிரெய்லர்

ரேவந்த் ரெட்டி ஆஜராக தில்லி போலீஸ் சம்மன்!

SCROLL FOR NEXT