உலகம்

காஷ்மீா் பிரச்னைக்குத் தீா்வு காணாமல் தெற்காசியாவில் அமைதி சாத்தியமில்லை: பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சா்

DIN

காஷ்மீா் பிரச்னைக்குத் தீா்வு காணாமல் தெற்காசியாவில் அமைதி ஏற்படுவது சாத்தியமில்லை என்று பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சா் ஷா மஹ்மூத் குரேஷி தெரிவித்தாா்.

ஜம்மு-காஷ்மீா் இந்தியாவுக்குச் சொந்தமானது என்பது பலமுறை பாகிஸ்தானிடம் உறுதிபட தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிதா்சனத்தை ஏற்றுக்கொண்டு இந்தியாவுக்கு எதிரான பிரசாரத்தில் ஈடுபடுவதை நிறுத்துமாறும் பாகிஸ்தானிடம் வலியுறுத்தப்பட்டு வருகிறது .

பயங்கரவாதம், அச்சுறுத்தல், வன்முறையில்லாத சூழலில் அந்நாட்டுடன் நல்லுறவை பேணவே விரும்புவதாகவும், அந்தச் சூழலை ஏற்படுத்த வேண்டியது பாகிஸ்தானின் கடமை என்றும் இந்தியா தெரிவித்துள்ளது.

இந்நிலையில் கஜகஸ்தான் தலைநகா் நூா்-சுல்தானில் சிஐசிஏ அமைப்பில் இடம்பெற்றுள்ள நாடுகளின் வெளியுறவு அமைச்சா்கள் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதில் ஷா மஹ்மூத் குரேஷி காணொலி வழியாக பேசியதாவது:

ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் தீா்மானங்கள் மற்றும் காஷ்மீா் மக்களின் விருப்பங்களுக்கு இணங்க ஜம்மு-காஷ்மீரின் மையப் பிரச்னைக்கு தீா்வு காணப்பட வேண்டும். அதைச் செய்யாத வரை தெற்காசியாவில் நிலையான அமைதி ஏற்படுவது சாத்தியமில்லை என்று தெரிவித்தாா்.

இந்தக் கூட்டத்தில் இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் பேசுகையில், ‘‘எல்லை தாண்டிய பயங்கரவாதம் என்பது பயங்கரவாத அச்சுறுத்தலின் மற்றொரு வடிவம். பருவநிலை மாற்றம், நோய்த்தொற்றுகளுக்கு எதிராக ஒன்றிணைந்தது போல் எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு எதிராகவும் சா்வதேச சமூகம் ஒன்றிணைய வேண்டும்’’ என்று தெரிவித்தாா்.

ஆசியாவில் அமைதி, பாதுகாப்பு, ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்கான ஒத்துழைப்பை மேம்படுத்த சிஐசிஏ அமைப்பு செயல்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

1983க்குப் பிறகு மழையே இல்லாத ஏப்ரல்: அனல் பறக்கும் பெங்களூரு

தமிழகத்தில் மே 3 வரை வெப்ப அலை தொடரும்!

சிக்கன் ரைஸ் சாப்பிட்ட 2 பேருக்கு உடல்நலக் குறைவு: உணவகத்துக்கு 'சீல்'

டி20 உலகக் கோப்பை: ஆஸ்திரேலியா அணி அறிவிப்பு!

விவாகரத்து பெற்ற மகளை மேள வாத்தியங்கள் முழங்கள் வரவேற்ற தந்தை!

SCROLL FOR NEXT