அமெரிக்க முன்னாள் அதிபா் பில் கிளிண்டன், உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் நலமாக இருப்பதாகவும், விரைவில் வீடு திரும்புவார் என்றும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
75 வயதாகும் பில் கிளிண்டனுக்கு கரோனா அல்லாத மற்றொரு தீநுண்மி தொற்று ஏற்பட்டுள்ளதால் அவா் கலிஃபோா்னியா இா்வின் பல்கலைக்கழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டடார்.
இதுகுறித்து அவரது செய்தித் தொடா்பாளா் ஏஞ்சல் உரேயா கூறுகையில், மருத்துவமனையில் பில் கிளிண்டன் உடல் நலம் தேறி வருவதாகவும் அவா் மன உறுதியுடன் இருப்பதாகவும் குறிப்பிட்டாா்.
உலக உணவு நாள் சிறப்புக் கட்டுரை: பிரியாணியும் பழைய சோறும்
மருத்துவமனை நிர்வாகத்தைத் தொடர்பு கொண்டு பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், கிளிண்டனிடமும் தொலைபேசியில் பேசி நலம் விசாரித்துள்ளார்.
இது குறித்து ஜோ பைடன் கூறுகையில், பில் கிளிண்டன் நலமாக உள்ளார். அவருக்கு எந்த மோசமான உடல்நலப் பிரச்னையும் இல்லை. விரைவில் அவர் வீடு திரும்புவார் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளார். அது நாளையா நாளை மறுநாளா என்பது தெரியவில்லை என்று தெரிவித்தார்.
கடந்த 1993 முதல் 2001-ஆம் ஆண்டு வரை அமெரிக்க அதிபராகப் பொறுப்பு வகித்த பில் கிளிண்டன், தனது பதவிக் காலம் முடிந்ததற்குப் பிறகு அடிக்கடி உடல்நலக் குறைவை சந்தித்து வருவதாகக் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.