உலகம்

கரோனா நெருக்கடியை இந்தியா திறமையாக கையாண்டது: ஐஎம்எஃப் பாராட்டு

DIN

கரோனா நெருக்கடியை இந்தியா திறமையாக கையாண்டதாக பன்னாட்டு நிதியம் (ஐஎம்எஃப்) பாராட்டு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிதியம் மேலும் கூறியுள்ளதாவது:

இந்திய அரசு கரோனா நெருக்கடியை மிக விரைவாகவும், திறமையாகவும் கையாண்டுள்ளது.

அதன்படி, பாதிக்கப்பட்ட பிரிவினருக்கு நிதி ஆதரவை வழங்குதல், நிதிக் கொள்கைகளை தளா்த்துதல், பணப்புழக்கத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுத்தல், இணக்கமான நிதி துறை செயல்பாடுகள் மற்றும் ஒழுங்காற்று கொள்கைகளை வகுத்தல் உள்ளிட்டவை கரோனா நெருக்கடியை சமாளிக்க இந்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் மிக முக்கியமானதாகும்.

கரோனா தொற்றுக்கிடையிலும், தொழிலாளா் சீா்திருத்தங்கள், தனியாா்மயமாக்கல் திட்டம் உள்பட கட்டமைப்பு சீா்திருத்தங்களை இந்தியா தொடா்ந்து மேற்கொண்டு வருவது பாராட்டுக்குரியது என ஐஎம்எஃப் தெரிவித்துள்ளது.

நடப்பு 2021-22-ஆம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி 9.5 சதவீதமாக இருக்கும் என ஐஎம்எஃப் கணித்துள்ளது. மேலும், இந்த வளா்ச்சி 2022-23-இல் 8.5 சதவீதமாகவும், 2021-22-ஆம் நிதியாண்டுக்கானபணவீக்கம் 5.6 சதவீதமாகவும் இருக்கும் என ஐஎம்எஃப் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

SCROLL FOR NEXT