உலகம்

கனடா பாதுகாப்புத் துறை அமைச்சராக இந்திய வம்சாவளிப் பெண் நியமனம்

DIN

கனடா நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அனிதா ஆனந்த் நியமிக்கப்பட்டுள்ளார். 

கனடாவில் சமீபத்தில் நடந்து முடிந்த பொதுத்தேர்தலில் லிபரல் கட்சி வெற்றி பெற்ற நிலையில், ஜஸ்டின் ட்ரூடோ மூன்றாவது முறையாக அந்நாட்டின் பிரதமர் ஆனார். 

இதையடுத்து, ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான புதிய அமைச்சரவை பதவியேற்றுள்ளது. அமைச்சரவையில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உள்பட 39 அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர். 

இதில், நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அனிதா ஆனந்த் நியமிக்கப்பட்டுள்ளார். 54 வயதாகும் அனிதா ஆனந்தின் தந்தை தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

லிபரல் கட்சி சார்பில் ஓக்வில்லே(oakville) தொகுதியில் போட்டியிட்ட அனிதா ஆனந்த் 46% வாக்குகள் பெற்றார். 

முன்னதாக, கனடாவின் பொது சேவைகள் மற்றும் கொள்முதல் துறையின் அமைச்சராக பணியாற்றியதுடன் சுகாதாரப் பேரிடரின்போது சிறப்பாகப் பணியாற்றியவர் என்ற பெருமையை அனிதா ஆனந்த் பெற்றுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சன் ரைசர்ஸ் பேட்டிங்; அணியில் மீண்டும் மயங்க் அகர்வால்!

கொல்லாத கண்ணாரா - விடியோ பாடல்

‘பாலிவுட் நடிகர்களில் அதிகம் மதிக்கப்படும் இரண்டாவது நபர் நான்’ : கங்கனாவின் வைரல் விடியோ!

பிரஜ்வல் பாலியல் வன்கொடுமை: பாதிக்கபட்டோர் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

படிக்காத பக்கங்கள் படத்தின் டிரெய்லர்

SCROLL FOR NEXT