ஹிரோஷிமா அணுகுண்டு தாக்குதலில் சிக்கியவர் 96 வயதில் மரணம்
இரண்டாம் உலகப் போரின் போது அணுகுண்டு தாக்குதலுக்குள்ளான ஹிரோஷிமா நகரத்தைச் சேர்ந்த சுனோய் சுபாய் என்பவர் தனது 96ஆவது வயதில் மரணமடைந்தார்.
இரண்டாம் உலகப் போரின் போது அணுகுண்டு தாக்குதலுக்குள்ளான ஹிரோஷிமா நகரத்தைச் சேர்ந்த சுனோய் சுபாய் என்பவர் தனது 96ஆவது வயதில் மரணமடைந்தார்.
இரண்டாம் உலகப்போரின் போது ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி நகரங்களின் மீது அமெரிக்கா அணுகுண்டு தாக்குதல் நடத்தியது. ஆகஸ்ட் 6, 1945ஆம் ஆண்டு ஹிரோஷிமா நகரத்தின் மீது நிகழ்த்தப்பட்ட இந்த அணுகுண்டு தாக்குதலில் 3 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பலியாகினர்.
இதையும் படிக்க | சென்னை விமான நிலையத்திற்கு கடத்தி வரப்பட்ட ரூ.1.41 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்
Advertisement
Advertisement
உலகின் மோசமான தாக்குதலாக இன்றளவும் பார்க்கப்பட்டு வரும் இந்த சம்பவத்தில் தப்பிப் பிழைத்தவர்கள் அதன் சாட்சியங்களாக இருந்து வருகின்றனர்.
சுனோய் சுபாய் என்ற 96 வயது முதியவரும் அவர்களில் ஒருவர். கடந்த 2016ஆம் ஆண்டு அமெரிக்க அதிபராக இருந்த பராக் ஒபாமா இவரை சந்தித்து சென்றார்.
இந்நிலையில் முதுமையின் காரணமாக சுபாய் வியாழக்கிழமை மரணமடைந்தார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.