கோப்புப்படம் 
உலகம்

தாக்கத்தை ஏற்படுத்தும் உலக வெப்பமயமாதல்; திட்டம் வகுத்த ஜி 20 நாடுகள்

பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் குறிப்பிட்டிருந்த அளவை விட உலக வெப்பமயமாதலை குறைக்க ஜி 20 நாடுகளை சேர்ந்த தலைவர்கள் ஒப்பு கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

DIN

உலக வெப்பமயமாதலை தொழிற்சாலைகள் வருவதற்கு முந்தைய காலத்தில் இருந்த அளவில் அதாவது 1.5 டிகிரி செல்சியஸாக கட்டுப்படுத்த ஜி 20 நாடுகளின் தலைவர்கள் ஒப்புக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இதுகுறித்த அறிவிப்பு ஞாயிற்றுக்கிழமை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதில், 1.5 டிகிரி செல்சியஸ் என்ற இலக்கை கட்டுக்குள் வைப்பது குறித்து பேசப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து வெளியிடப்பட்ட வரைவில், 1.5 டிகிரி செல்சியஸ் என்ற உறுதிமொழியை அடையாமல் ஜி 20 நாடுகள் தோல்வி அடையும் என்பது போலவே குறிப்பிடப்பட்டிருந்தது. 

ஆனால், கிளாஸ்கோ பருவநிலை மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள நிலையில், இரவு பகல் பாராமல் அலுவலர்கள் வரைவை திருத்தி எழுதியுள்ளனர். உலகின் 80 சதவிகித கார்பன் உமிழ்வு, ஜி 20 நாடுகளால் வெளியிடப்படுகிறது. இதை களையும் விதமாக எடுக்கும் உறுதிமொழிகள் கிளாஸ்கோ பருவ நிலை மாநாட்டுக்கு உத்வேகம் அளிக்கும் விதமாக அமையும்.

இதுகுறித்து இத்தாலி பிரதமர் மரியோ டிராகி கூறுகையில், "இன்று நாம் எடுக்கும் முடிவுகள் கிளாஸ்கோ உச்சி மாநாட்டின் வெற்றியின் மீதும் இறுதியில் காலநிலை நெருக்கடியைச் சமாளிக்கும் நமது திறனின் மீதும் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும். பாரிஸ் உடன்படிக்கையின் நோக்கங்களுடன் ஒத்துப்போகும் நீண்ட கால இலக்குகளை நாம் அமைக்க வேண்டும். அவற்றை அடைய குறுகிய கால மாற்றங்களைச் செய்ய வேண்டும்" என்றார்.

பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் குறிப்பிட்டிருந்த அளவை விட உலக வெப்பமயமாதலை குறைக்க ஜி 20 நாடுகளை சேர்ந்த தலைவர்கள் ஒப்புதல் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. உலக வெப்பமயமாதலை 2 டிகிரி செல்சியஸுக்கு கீழ் அதாவது கிட்டத்தட்ட 1.5 டிகிரி செல்சியஸுக்கு இணையாக குறைக்க வேண்டும் என பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காஸா: பத்திரிகையாளர்கள் பலி; கேள்விக்குறியான மக்களின் உயிர்! குண்டுவீச்சு தாக்குதல்களை தீவிரப்படுத்திய இஸ்ரேல்

இந்திய அணியில் இடம்பிடிக்க உதவும் மகளிர் பிரீமியர் லீக் தொடர்: ஜெமிமா ரோட்ரிக்ஸ்

பங்கு பிரிப்பு மற்றும் போனஸ் குறித்த அறிவிப்பை வெளியீட்ட வெல்கியூர்!

டிரம்ப் வரி உயர்வு... உக்ரைன் அதிபருடன் பேசிய மோடி!

ராகுல் காந்தி உள்பட 300 எதிர்க்கட்சி எம்பிக்கள் கைது! | செய்திகள்: சில வரிகளில் | 11.8.25

SCROLL FOR NEXT