முகப்பு
உலகம்

வாட்ஸ் ஆப் நிறுவனத்திற்கு ரூ.1949 கோடி அபராதம் விதித்த அயர்லாந்து

பயனர்களின் தனியுரிமை தரவுகளை தவறாகக் கையாண்டதாகக் கூறி வாட்ஸ் ஆப் நிறுவனத்திற்கு அயர்லாந்து அரசு இந்திய மதிப்பில் ரூ.1949 கோடி அபராதம் விதித்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:03 AM
வாட்ஸ் ஆப் நிறுவனத்திற்கு ரூ.1949 கோடி அபராதம் விதித்த அயர்லாந்து
பகிர்:

பயனர்களின் தனியுரிமை தரவுகளை தவறாகக் கையாண்டதாகக் கூறி வாட்ஸ் ஆப் நிறுவனத்திற்கு அயர்லாந்து அரசு இந்திய மதிப்பில் ரூ.1949 கோடி அபராதம் விதித்துள்ளது.

வாட்ஸ்ஆப் செயலி உலகம் முழுவதும் பரவலாக பயனபடுத்தப்பட்டு வருகிறது. பயனர்களின் தரவுகளை விற்பனை செய்வதாக அவ்வப்போது அந்நிறுவனத்தின் மீது புகார்கள் எழுந்து வந்தன. 

இந்நிலையில் கடந்த 2018ஆம் ஆண்டு அயர்லாந்து நாட்டின் தரவு பாதுகாப்பு விதிகளை மீறியதாக அந்நிறுவனத்தின் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பான விசாரணையில் வாட்ஸ்ஆப் நிறுவனம் முறைகேட்டில் ஈடுபட்டது உறுதியானது. 

இதனைத் தொடர்ந்து பயனர்களின் தரவுகளை ஐரோப்பிய நிறுவனங்களுக்கு பகிர்ந்த குற்றத்திற்காக வாட்ஸ்ஆப் நிறுவனத்திற்கு இந்திய மதிப்பில் ரூ.1949 கோடி அபராதம் விதித்து அயர்லாந்து அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும் பயனர்களின் தரவு பாதுகாப்பை உறுதி செய்யவும் அந்நிறுவனத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. எனினும் வாட்ஸ்ஆப் நிறுவனம் அரசின் அபராதத்திற்கு எதிராக மேல்முறையீடு செய்ய உள்ளதாகத் தெரிவித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →