கோப்புப்படம் 
உலகம்

நவம்பரில் அமெரிக்க, இந்தியாவுக்கிடையேயான 2+2 பேச்சுவார்த்தை

வெளியுறத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், பாதுகாப்புத்துறை அமைச்சர்கள் ராஜ்நாத் சிங் ஆகியோர் அமெரிக்காவில் நடைபெறும் 2+2 பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளவுள்ளனர்.

DIN

இந்தியா, அமெரிக்கா நாடுகளுக்கிடையேயான அதி முக்கியத்துவம் வாய்ந்த 2+2 பேச்சுவார்த்தை நவம்பரில் நடைபெறும் என வெளியுறவுத்துறை செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்கலா தெரிவித்துள்ளார். அமெரிக்காவுக்கு மூன்று நாள் பயணமாக சென்றுள்ள ஷ்ரிங்கலா, அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கள் உள்பட பல முக்கிய தலைவர்களை சந்தித்து பேசினார். 

பின்னர், வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசுவகையில், "நவம்பரில் நடைபெறவுள்ள  2+2 பேச்சுவார்த்தையை எதிர்நோக்கியுள்ளோம். தேதிகள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. இன்றைய பயணத்தை பயன்படுத்திக் கொண்டு இணைச் செயலாளர்களுக்கிடையேயான 2+2 பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டோம்" என்றார்.

கடந்த முறை, இருநாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்கள், பாதுகாப்புத்துறை அமைச்சர்கள் கலந்து கொள்ளும் 2+2 பேச்சுவார்த்தை தில்லியில் நடைபெற்றது. இம்முறை, பைடன் அதிபராக பொறுப்பேற்றப் பிறகு நடைபெறும் முதல் 2+2 பேச்சுவார்த்தை அமெரிக்காவில் நடைபெறவுள்ளது. இந்திய தரப்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், பாதுகாப்புத்துறை அமைச்சர்கள் ராஜ்நாத் சிங் ஆகியோரும் அமெரிக்காவின் சார்பில் அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கள், பாதுகாப்புத்துறை அமைச்சர் லாய்ட் ஆஸ்டின் ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

ஆப்கானிஸ்தான், ஐநா, இந்தாண்டின் இறுதியில் நடைபெறவுள்ள குவாட் நாடுகளின் மாநாடு ஆகிய விவகாரங்கள் குறித்து ஷ்ரிங்கலா ஆலோசனை மேற்கொண்டார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தடை நீங்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் 7 போ் கைது

நவராத்திரியில் உச்சம் தொட்ட வாகன, வீட்டு உபயோக பொருள்கள் விற்பனை!

இந்தோனேசிய பள்ளி கட்டட விபத்து: உயிரிழப்பு 14-ஆக உயா்வு

பிரிட்டன் யூத ஆலயத் தாக்குதல்: 6 பேரிடம் விசாரணை

SCROLL FOR NEXT